கேரள மாநிலத்தில் தேர்வெழுதும் மாணவி ஒருவருக்காக, 70 பேர் பயணிக்கக்கூடிய படகு இயக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவள் சென்று வர ரூ.18 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் கரிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மாணவி சண்டிரா பாபு. 17 வயதற்காகும் இவர், ஆலப்புலா எம்.என். பிளாக். SNDP பள்ளியில் +1 தேர்வினை எழுதவிருந்தார். அங்கு படகில் செல்ல அரைமணிநேரம் ஆகும். தனிப்படகில் பயணித்தால் ரூ.4000 வரை செலவாகும் என தெரிவித்தார். ஆனால் அவள் வீட்டில் அந்தளவு […]
பிரேசில் நாட்டில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக படகு ஒன்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அமேசான் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 28பேரை தேடும் பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பிரேசிலின் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து பிரேசிலின் வடபகுதியில் உள்ள அமாபா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் ஓகி புயல் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அவர்களால் முழுமையாக சுற்றி பார்க்க முடியவில்லை. தற்போது, கடல்பகுதியில் அதிகமாக சூறைக்காற்று வீசுவதால் கடந்த இரண்டு நாட்களாக படகு போக்குவரத்து விவேகானந்தர் சிலைக்கு செல்ல நிறுத்த பட்டிருந்தது. தற்போது இன்னும் சூறைக்காற்று வீசுவதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக படகு போக்குவரத்து நிறுத்த பட்டுள்ளது சுற்றுலா பயனிகுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.