வங்காளதேசத்தில் பத்மா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பத்மா நதியில் நேற்று பிற்பகலில் சுமார் 50 பயணிகளுடன் பயணித்த படகு மூழ்கியுள்ளது. இதில் மூன்று சிறு குழந்தைகள் மற்றும் 50 வயது பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படகில் பயணிகள் தவிர, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சரக்கு, தேங்காய் மற்றும் சைக்கிள்களையும் எடுத்துச் […]
சீனாவின் ஜாங்கே ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5 பேரை காணவில்லை. தென்மேற்கு சீனாவின் கைஜோ மாகாணத்தில் லுபான்ஷுய் நகரில் உள்ள ஜாங்கே டவுன்ஷிப்பில் அமைந்துள்ள ஜாங்கே ஆற்றில் பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இந்த விபத்து மாலை 4:50 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த படகில் 40 பேர் வரை […]
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தால் 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள கடற்பகுதியில் 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் படகில் மீன் பிடித்துள்ளனர். பின்னர் கரைக்கு மீனவர்கள் திரும்பியுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இந்த படகில் மொத்தமாக 16 மீனவர்கள் பயணித்து உள்ளனர். இந்த படகு விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மீதமுள்ள 12 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து […]
பெரு நாட்டில் இரண்டு படகுகள் மோதி 11 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் உள்ள ஹல்லகா ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் என்ற பகுதிக்கு படகு மூலம் ஹல்லகா ஆற்றில் 80 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆற்றில் மோட்டார் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது மோட்டார் படகு இந்த படகின் மேல் மோதியதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு […]
லிபியா நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழ்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் அகதிகள் படகுகளில் செல்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக செல்லும்பொழுது அடிக்கடி கடலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 75 அகதிகளை ஏற்றி கொண்டு படகு புறப்பட்டுள்ளது. இந்த படகு லிபியாவின் மேற்கு கடலோர மாவட்டமான கும்சியிலிருந்து சென்றுள்ளது. திங்கள்கிழமையன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு […]