ஜம்மு-காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் தாரிக் அஹ்மத் பட்லூ என்பவர் படகு ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் தொடங்கவுள்ளார். இப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த சுகாதார வசதிகளுடன் கூடிய படகு ஆம்புலன்ஸ் சேவை பயனளிக்கும் என கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அப்போது என்னை அழைத்துச் செல்ல யாரும் தயாராக இல்லை என்று அவர் கூறினார். இதனால் மருத்துவமனைக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட பின்னர், இறுதியாக எனது நண்பர் ஒருவர் […]