பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 2019 எக்ஸ்5 அறிமுகம் செய்யப்பட்டது. நான்காம் தலைமுறை எக்ஸ்5 எஸ்யுவி மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பிஎம்டள்யூ மாடல் பிரிமீயம் எஸ்யுவி மாடலின் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. பக்கவாட்டுகளில் கிரீஸ் லைன்கள் முந்தைய மாடல்களை விட மிக நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த தோற்றம் தற்போதைய மாலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட நீலமாகவும், அகலமாகவும், உயரமாக இருக்கிறது. […]