கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் தமிழகம் வராதது ஏன் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் தமிழகம் வராதது ஏன் மற்றும் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்ற சந்தேகம் எழுவதாக விமர்சித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் தனது கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்ட பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கம்யூனிஸ்ட் ஆளுகின்ற கேரளாவிற்குச் சென்ற பிரதமர் மோடி […]
லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் அமைக்காவிடில் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஈடுபட்டிருக்கிறது.மேலும் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 83 நாட்கள் ஆகியுள்ள நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் அமைக்காதது மோசடி மடியில் கனமிருந்தால் வழியில் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் அமைச்சர் விஜயபாஸ்கரை கிண்டல் செய்யும் விதமாக பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் குட்கா ஊழலில் சிபிஐ சோதனைக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுகவில் புதிய பதவி கிடைத்த செய்தி அனைவரும் வியக்கும் வகையில் ஊழல் செய்ததற்கான வெகுமதியோ என்னவோ?என்று கேலி செய்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குட்கா ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் ஆணையர் ஜார்ஜ்,இன்னாள் ஆணையர் டி.கே ராஜேந்திரன் உள்ளிட்டோர்களின் வீடுகளில் சிபிஜ சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த […]
சேம்சைடு கோல்” போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது,தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகளை அமைத்து வழிப்பறி செய்யப்படுகிறது. திமுகவின் மீது குற்றச்சாட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 45 சுங்கச்சாவடிகளில் 23 சாவடிகளை அமைத்தவர் டி.ஆர்.பாலு தான் என்பதை தெரிந்து கொண்டே “சேம்சைடு கோல்” போடுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்று கூறினார்.சுங்கசாவடி கட்டணம் குறித்து திமுக குற்றம் சாட்டி இருந்த […]
பள்ளி, கல்லூரி, விடுதி போன்ற பகுதிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார் மேலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார். திருவாண்ணாமலை கல்லூரி மாணவிக்கு விடுதி காப்பாளரும்,போராசிரியருமான தங்க பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் கொடுத்தார்.இதனிடையே பேராசிரியர் தங்க பாண்டியன் இடைநீக்கம் செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
பாமக முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி ஜெ. குரு மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: நான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையும், வன்னியர் சங்கத்தின் தலைவருமான மாவீரன் குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் மாவீரன் குருவின் மறைவு தான். எனக்கும், […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண் டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் ரெயில் மறியல் நடந்தது.சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது போராட்டக்காரர்கள் நிலையத்தில் நுழையாமல் தடுக்க தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர் போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே சென்ற டாக்டர் […]