மே 26 ஆம் தேதி சந்திர கிரகணத்திற்கு பின்பு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளுக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணம் என்பது சூரியன்,பூமி,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்ற ஒரு நிகழ்வாகும்.அந்தவகையில்,இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது வருகின்ற மே 26 ஆம் தேதி அன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் தோன்றும் எனவும், மேலும்,கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். […]