சென்னை: கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாக எழுந்த விமர்சனத்திற்கு KPY பாலா பதிலடி கொடுத்துள்ளார். கலக்கு போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற பெயருடன் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், இப்பொது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இவர் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன் மட்டும்மல்ல, அவர் தற்போது மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றி […]