சார்ஜா : நேற்று சார்ஜாவில் நடைபெற்ற பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டிகளில் துவக்கத்தில் நடைபெற்ற லீக் போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை இந்திய பாரத பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ,இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் எனப்பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.