ரூ. 8,88,31,000 மதிப்பிலான தங்க கழிவறை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த கலைஞர் மயூரிஜியோ காட்டலன் ( Maurizio Cattelan) தங்க கழிவறை ஒன்றை வடிமைத்தார்.இது 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டது. கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த கழிவறை குக்கேன்ஹெய்ம் மியூசியத்தில் (Guggenheim Museum in New York, United States) கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.இந்திய மதிப்பில் இந்த தங்கத்தால் ஆன கழிவறையின் மதிப்பு ரூ. 8,88,31,000 ($1.25 million) ஆகும். […]