3000 மான்கள் ஒரே இடத்தில் துள்ளி குதித்து ஓடிய அழகிய காட்சியை பிரதமர் மோடி ரீடிவீட் செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது வெலவாடர் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் அதிகளவு இருப்பது மான்கள். அதிலும் அழியும் நிலையில் உள்ள மானினமான பிளாக்பக்(கலைமான்கள்) மான்கள் அதிகளவு உள்ளது. மேலும், இந்த பூங்காவில் பல்வேறு வகையில் இருக்கும் புல்லின வகைகள் உள்ளது. இதனையடுத்து இந்த இடத்தில் வலசை நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். […]