தூத்துக்குடியில் கரும்பூஞ்சை நோய்க்கு தொழிலாளி பலியாகவில்லை என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடி,கோவில்பட்டியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சவுந்தர்ராஜன்(57) என்பவர் கொரோனா அறிகுறிகள் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்தது.இருப்பினும் உடல்நிலைமிகவும் மோசமாக இருந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் உயிரிழந்தார். இது குறித்து சவுந்தர்ராஜனின் மகன் விஜயராஜ் கூறுகையில்,”எனது தந்தைக்கு கண்களில் வீக்கம், தானாக நீர் வடிதல்,பார்வை குறைவு பிரச்னைகள் ஏற்பட்டது.உடனே சிடி […]