இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கடத்தியதாக அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் தகவல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே அமைத்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்படும் BLA கிளர்ச்சியாளர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தை தனியாக பிரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா – பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது. அப்போது ரயில் மீது துப்பாக்கியால் சுட்டு அதை நிறுத்தி 120க்கும் மேற்பட்டோரை சிறைபிடித்துள்ளனர். பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியை நடத்தி வரும் பிரிவினைவாத பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) அமைப்பு, ரயிலை தாங்கள் கடத்தியுள்ளதாகவும், ராணுவம் தாக்கினால் பயணிகளை கொன்று விடுவோம் எனவும் […]
Pakistan : பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண கடற்படை தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானில், பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் அந்நாட்டின் 2வது மிக பெரிய கடற்படை தளம் மீது நேற்று பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. பலுசிஸ்தான் PNS சித்திக் கடற்படை தளம் மீது நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் PNS சித்திக் கடற்படை தளத்தில் சுமார் 10 இடங்களில் பயங்கர சத்தத்துடன் […]