திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். பி. கண்ணன் தமிழ், மலையாள மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்து வந்தவர்.இவருக்கு 69 வயது ஆகும்.இவர் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் சகோதரரும் ஆவார். இவர் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் டிக் டிக் ,அலைகள் ஓய்வதில்லை ,மண் வாசனை ,முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் . 2001-ஆம் ஆண்டில் வெளியான கடல் பூக்கள் […]