இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு காவல் துறைக்கு உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார். இதனை முன்னிறுத்தி மாநிலத்தில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பினராயி விஜயன் […]