வழிபாட்டு தலம் பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் பேசியுள்ளோம் என பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்துள்ளனர். தொகுதி சார்ந்த பிரச்னைகள் மற்றும் மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து மனு அளித்ததாக தகவல் கூறப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், மத […]