மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் […]
உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்ட், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், சோன்பத்ரா மாவட்ட சிறப்பு நீதிமன்றம் குற்றசாட்டை உறுதி செய்த நிலையில், ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்டுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது ராம்துலர் கோண்டின் சட்டசபை உறுப்பினர் பதவி […]
உத்திர பிரதேச சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் கோஸ்வாமி சர்ச்சையில் சிக்கி கொண்டார். இந்தியாவில், பலரும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, கடன் அதிகம் பெற்று அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய கோரி மாநிலந்தோறும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பல நடிகர், நடிகைகள் இந்த விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க […]
நர்கட்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ ரஷ்மி வர்மா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகாரில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தின் நர்கதியாகஞ்ச் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவான ரஷ்மி வர்மா இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். தனது பதவி விலகலுக்கு தனிப்பட்ட காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். எம்.எல்.ஏ ரஷ்மி வர்மா கையில் உள்ள கடிதம் 2022 ஜனவரி 9 ஆம் தேதி எம்எல்ஏவின் லெட்டர் […]
மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். பாஜக எம்எல்ஏவும், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை நடத்த மாநில குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், சுவேந்து அதிகாரி நாளை காலை சிஐடி போலீஸார் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேற்குவங்க நந்திகிராம் பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி […]
தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சற்று நேரத்தில் சந்திக்கின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 16 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், […]
கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங்,கோமியம் குடிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது அதிவேகமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிகையானது 4 லட்சத்திற்கும் அதிகமாகியுள்ளது.இதனால்,பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,உத்தரபிரதேசத்தின் பைரியாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.சுரேந்திர சிங்,கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள விரும்பினால் மக்கள் அனைவரும் பசுவின் கோமியம் […]
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர்.பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தொடர்பு கொள்ள முயற்சிக்கும், இதனால், 15 முதல் 20 பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள […]
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது. நாளை விசாரணையில் 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு […]
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சியுடன் அம்மாநில முதல்வர் அசோக் கெலொட் இணைத்தார். இந்நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த மனு மீதான விசாரணை வந்தது. அப்போது நீதிபதி இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஒத்திவைத்தார். ராஜஸ்தானில் […]
இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைக்கு மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பதை மம்தா பானர்ஜி நினைவுபடுத்தினார். ஹேமதாபாத் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) எம்எல்ஏ தேபேந்திர நாத் ரேவின் “அரசியல் கொலைக்கு” பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) இருப்பதாக குற்றம் சாட்டியதற்காக மேற்கு வங்க முதல்வர் கூறுகையில் “ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் போல ”ஆளுநர் ஜகதீப் தங்கர் செயல்படுகிறார் என விமர்சித்தார். வடக்கு தினாஜ்பூரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, தேபேந்திர […]
இறந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக் குறிப்பு கிடைத்ததாக வங்காள காவல்துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 454 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் ஒரு கடைக்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்த உள்ளூர் வாசிகள் போலீருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் உடலை கைப்பற்றி […]
பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் . இன்று காலை அவரது வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தேபேந்திர நாத் ராய் கொலை செய்த பின்னரே தூக்கிலிடப்பட்டார் என்று எம்.எல்.ஏ.வின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர கர்நாடகா பாஜக எம்எல்ஏ யாகம் நடத்தியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஹோன்னலி தொகுதி பாஜக எம்எல்ஏ மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யார் கொரோனா வைரசுக்கு எதிராக யாகம் நடத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வைரஸில்லா உலகம் மீண்டும் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் பூஜை நடத்தி உள்ளனர். பூஜையில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்ததுடன், முகக்கவசம் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகையே உலுக்கி கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரசுக்கு கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவைகள் சிறந்த மருந்து என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிபிரயா தெரிவித்துள்ளார். சீனாவில் பரவிய இந்த கொடூர கொரோனா வைரஸ் படிபடியாக உலக நாடுகளிலும் பரவியது மட்டுமல்லாமல் உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. இந்த வைரசிற்கு பலியாகக்கூடியவர்களின் எண்ணிகையானது நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ள நிலையில் தற்போது அது இந்தியாவிலும் பரவியுள்ளதை மைய அரசு உறுதி செய்துள்ளது. இதனால் […]
அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தில் வங்கதேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா, ‘பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்’ மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும்’ என கூறினார். மேலும் பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்மூலம் கேன்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் வலிமை உள்ளது. குஜராத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் கேன்சர் நோயாளிகளின் மீது பசு சாணத்தை தேய்க்கின்றனர். பசு சீறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தமும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது […]
வேலைவாய்ப்பு இல்லாத, விரக்தியடைந்த வாலிபர்களால், பாலியல் குற்றங்கள் நடந்து வருவதாக பாஜக பெண் எம்.எல்.ஏ. கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர், ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் மாணவி ஒருவர் 12 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவரும், உச்சானா கலான் பெண் எம்.எல்.ஏ.-வுமான பிரேமலதா, வேலையில்லாதவர்கள் மற்றும் விரக்தியடைந்த இளைஞர்கள், கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார். […]