இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பவள விழாவை முடித்து விட்டு, தற்போது தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. இன்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். காலையில் இந்தியா சிமெண்ட்ஸ் விழாவை முடித்து கொண்டு தற்போது சென்னையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார் . அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் […]
புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில், ஸ்ரீ வெங்டேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் Modi@20 எனும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்ததும் விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று கலந்துகொண்டு வெளியிட்டார். பின்னர் புதுச்சேரி மீனவர்களுடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். அதுகுறித்து பேசிய அவர், மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘ என […]
மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று பதவியேற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த ஆட்சியைப் பிடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.ஆனால்,மத்திய அமைச்சரவை முதல் முறையாக இன்று விவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து,புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.அதில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களுக்கான பதவியேற்பு […]
தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி தற்போது முன்னிலையில் உள்ளார். தமிழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. அதில் , முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பின்னர் காலை 8.30 மணியிலிருந்து தொடங்கப்பட்ட மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில்,திமுக கூட்டணியினர் 153 […]
தாராபுரம் தனித் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன்,தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவு சந்தித்துள்ளார். தமிழகம்,புதுச்சேரி,கேரளா,மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தில்,முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பின்னர் காலை 8.30 மணியிலிருந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட […]