தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் தொடர் கைதுகளை தொடர்ந்து, தேசிய தலைவர் ஜேபி நட்டவால் அமைக்கப்பட்ட பாஜக ஆய்வு குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தி வருகிறது. சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று, தூத்துக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஜான் […]