தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் தமிழக அரசால் அடிக்கடி பொய் குற்றசாட்டுகளால் கைது செய்யப்படுவதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குழு ஒன்றை அமைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தீஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்றைய தினம் சென்னை வந்தது. தற்போது இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி இல்லத்திற்கு சென்றுள்ளனர். […]