முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை எனவும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை. – பாஜக முழு அடைப்புக்கு தடை கேட்ட வழக்கில் அண்ணாமலை தரப்பு விளக்கம். கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார். இதற்கு தடை கேட்டு , சென்னை […]
பாஜக அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டமானது கோவை வியாபாரிகளையும் ,கோவை மக்களையும் வெகுவாக பாதிக்கும். – தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் கருத்து. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் வெடிப்பு தொடர்பாகவும், அதற்கான ஆளும் திமுக அரசு நடவடிக்கை குறித்து, திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த் போராட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் […]
பாஜக அறிவித்துள்ள பந்த் போராட்டத்திற்கு தடை கேட்ட வழக்கு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக அறிவித்தது. இந்த பந்திற்கு தடை கேட்டு , சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.ஆர்.வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாஜகவின் பந்த்-ஐ சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும், அதற்கு தடை கேட்டும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த வழக்கை […]