அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை அ.தி.மு.க மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை டிஸ்யூ பேப்பர் போன்றது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை அ.தி.மு.க மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, `பி.ஜே.பி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நான் எம்.பி-யாக இருக்கும்போது செய்ய முடியாத விடுபட்டுப்போன பணிகளை அண்ணன் ராஜா செய்வார் […]
உ.பி.யில் ராமர் கோவில் கட்டும் பணியில் காலம் தாழ்த்தப்பட்டு வருவது, சாதுக்கள் மற்றும் துறவிகள் மத்தியில் சீற்றத்தை அதிகரிக்க செய்து வருகிறது. இந்நிலையில், சாது திகம்பர அக்ஹர மஹந்த் சுரேஷ் தாஸ் தலைமையில் சாதுக்கள் மற்றும் துறவிகள் குழு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று சந்தித்து பேசினர். முதல்வருடனான சந்திப்புக்கு முன்பாக பேசிய சாதுக்கள், அயோத்தியில் ராமர் கட்டும் பணி மிகவும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆளும் பாரதிய ஜனதா அரசு, ராமர் கோவில் கட்டுமான பணிகளை […]
இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த 29-ந்தேதி புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் சிங்கப்பூர் போய் சேர்ந்தார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பர நலன்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நட்புறவு கடற்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு […]
நாடு முழுவதும் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தாலும், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறுவதற்கு சில விதிமுறைகளை பூர்த்தி செய்தாக வேண்டும். இப்படி பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 56 தேசிய மற்றும் மாநில கட்சிகள் உள்பட மொத்தம் 1,866 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் […]
காஷ்மீர் சிறுமி பாலியல் சித்ரவதை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது முதியவர் ஒருவர் பேத்தி வயதில் இருக்கும் பெண் குழந்தையை சித்ரவதை செய்யும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கொதித்துள்ளார். இதுதான் நாம் வாழும் உலகமா? இந்த மாதிரியான நாட்டை தான் நீங்க ஆள விரும்பினீர்களா பிரதமர் மோடி அவர்களே? ஓட்டு […]
தமிழக பாஜக மாநிலச்செயலாளர் எச்.ராஜா சிறிது அளவு நாவடக்கமின்றி, நாகரீகம் ஏதுமின்றி தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்களை தகாத வார்த்தைகளில் விமரிசித்துவருகிறார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞரையும், திமுக மாநிலங்களவை […]
தமிழக பாஜக மாநிலச்செயலாளர் எச்.ராஜா சிறிது அளவு நாவடக்கமின்றி, நாகரீகம் ஏதுமின்றி தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்களை தகாத வார்த்தைகளில் விமரிசித்துவருகிறார். “தமிழர்களின் தலைநிமிர்வு” தந்தை பெரியாரின் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு வன்மத்துடன் எதிர்கொள்கைகளை உடைய தலைவர்களை விமர்சித்துவருகிறார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், […]
இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகர்கள் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டு தமிழர்கள் மீது கத்தி வைத்துப் பதம்பார்க்க நினைக்கும் ரஜினி அண்மையில் வன்முறையின் உச்ச கட்டம் என ட்விட்டர் பதிவு வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அறவழியில் போராடிய தமிழர்கள் வன்முறையாளர்களா? என கேள்வி எழுப்பியுள்ள பாரதிராஜா, தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் ரஜினி பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினியைப் போன்ற ஒரு நடிகனை தமிழ் திரையுலகம் இதுவரை சந்தித்ததே […]
காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் . இவர் பல படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைப்பவர். இந்நிலையில் காயத்ரிக்கு சமீப காலமாக பல பிரச்சனைகள் வருகின்றது, பிரபல தொலைக்காட்சி இவர் கைது என்று கூட செய்தி வெளியிட்டது. இதனால், அவரே அதிர்ச்சியானார், மேலும், காயத்ரி நீண்ட வருடங்களாக பிஜேபி கட்சியில் மெம்பராக இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது ‘என் பிரச்சனைக்கு கட்சியில் இருந்து யாருமே கண்டுக்கொள்ளவில்லை, அதிலும் ஒரு பெண் தலைவர் என்னை கண்டுக்கவே இல்லை’ […]
வரும் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசவுள்ளார். பிரதமர் மோடி வருகிற 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 20ஆம் தேதி பயண நிறைவின் போது இந்தியா திரும்பும் வழியில் பெர்லின் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அங்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலை மெர்க்கலை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் […]
பிரதமர் நரேந்திர மோடி மட்டும் லிமோசன் காரில் பயணிக்கவுள்ளார். லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில், 52 காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு லண்டனில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாக வாதாடுகிறார் பெண் வழக்கறிஞரான தீபிகா சிங் ரஜாவத். ஜம்முவில் 5 வயது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வழக்கில் தாம் ஆஜராவது தமது மகளுக்காகவும் சேர்த்துத்தான் என்றார். இவ்வழக்கில் இருந்து விலகி இருக்கும்படி தமக்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய தீபிகா சிங், மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மேலும் தெரிவித்தார்.