கேரளாவில் பறவைக்காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது .மேலும் நோய் கண்டறியப்பட்ட கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரு மாவட்டங்களின் சில பகுதிகளில் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் நோயால் இறந்த பின்னர் […]