தொடரும் சர்வர் பிரச்சனை.. ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்!

சர்வர் பிரச்சனை காரணமாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், ஸ்மார்ட் கார்டுகளை கொண்டுசென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்தநிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அமல்படுத்திய தேதி முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை பதிவு … Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்த மாதம் முதல், ஏழாயிரத்து 726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், கல்வி அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும் இந்தமுறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும், 15 ஆயிரத்து 452 கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர்கள் பள்ளிக்கு கால தாமதமாக … Read more