குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களவை ஒப்புதலை தொடர்ந்து மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் மசோதா ஒப்புதல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 2023ம் ஆண்டு இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்து, தமிழகத்தில் குருவிக்காரர் சமுதாயத்துக்கு […]
சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருப்பார் என சட்டப்பேரவையில் அறிவிப்பு. முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் முக ஸ்டாலினும், இணை வேந்தராக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இருப்பார்கள் […]