பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இந்த சமயத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை […]