7 உட்பிரிவு சாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரை அழைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. […]