பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுத் தேர்வுகள் முறைகேட்டை தடுப்பதற்காக சட்ட மசோதா 2024ஐ பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கால் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான விதிகள் உள்ளன. அதன்படி, தேர்வில் மோசடி செய்வபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க சட்டம் வழிவகுக்கிறது. மசோதாவை தாக்கல் செய்தபின் […]
ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை பஞ்சாபியர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவு மிச்சமாகும் என […]
கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றன. கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டாக குறைக்க எதிர்ப்பு தெரிவித்தும் […]
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கல். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கலாகிறது. தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்ட முன்வடிவை நாளை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்தத்திற்கான சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த சட்டப்பேரவையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் […]
இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார். இது வரை ஜாதிய ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட சூழலில் தற்போது பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் மசோதா அரசியலமைப்பு சட்டம் 124_இல் திருத்தம் கொண்டுவர மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாளைய தினம் மாநிலங்களையில் தாக்கல் செய்ய இருக்கின்றது.இந்த மசோதா நிறைவேற்ற […]