இந்தியாவில் 1881-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தான் முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பின்னர் 1931-ம் ஆண்டு வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்த முந்தைய தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் தலைமையிலான […]