அராரியா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கும் முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ரா நதியின் குறுக்கே அதிக பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதி கட்டுமான பணியிலேயே இடிந்து விழுந்துள்ளது. இரண்டு பகுதிகளான பிளாக் ஏ மற்றும் பிளாக் பி ஆகியவற்றை இணைப்பதற்கான என மொத்தம் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்ட பட்ட பாலமானது கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பாதி […]
வெப்ப அலை : உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அலை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியா முழுவதும் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை படி படியாக உயரக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. ஜூன் 13 முதல் ஜூன் 16 வரை கிழக்கு மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்திலும், பீகாரில் ஜூன் 13 வரையிலும் வெப்ப […]
டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் […]
டெல்லி: மக்களவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது மாநில கட்சிகளிடம் தேசிய கட்சிகள் ஆதரவு கேட்கும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக நிதிஷ் குமார் (JDU), சந்திரபாபு நாயுடு (TDP) ஆகியோரின் ஆதரவை NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிகள் பெற முயற்சித்து வருகின்றன. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழல் தான் இன்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் (I.N.D.I.A கூட்டணி) மற்றும் JDU தலைவர் நிதிஷ்குமார் (NDA கூட்டணி) ஆகியோர் ஒன்றாக […]
சென்னை: பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலமாக மீட்கப்ட்டதால் பள்ளிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் ஓர் தனியார் பள்ளியில் 4 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். இதுகுறித்து போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் அந்த சிறுவன் பயின்று பள்ளி வளாகத்தில் சிறுவனின் உடல் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவன் பள்ளிக்குள் சென்றது சிசிடிவியில் பதிவாகி இருந்ததாகவும், அதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பாட்னா […]
Amit Shah: மத்திய அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பியுள்ளார். அதாவது, தேர்தல் பரப்புக்காக இன்று பீகார் மாநிலம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். […]
Marries Mother In Law: பீகார் மாநிலம் பாங்காவில் இருந்து வந்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட காதல் கதை கடைசியில் திருமணமாக முடிந்துள்ளது. இந்த சம்பவம் பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தையும் தாண்டி பரவ தொடங்கியது. இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த பலரும், எப்படி இப்படியொரு நிலை உருவாகும் என்று யோசித்து சமூக வலைதளங்ளில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பீகாரை சேர்ந்த சிக்கந்தர் யாதவின் மனைவி, […]
Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தேர்தல் சமயம் என்பதால் தேசிய கட்சிகளான பாஜக , காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தேர்தல் பரப்புரைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் வாக்குறுதி : குறிப்பாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சம பகிர்வு என்ற தலைப்பின் […]
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதில் 7 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
INDIA Alliance : பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடைய தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது இறுதியானது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டது. 40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் […]
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு ” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்காமல், சனாதன ஒழிப்பு மாநாடு என வைத்திருப்பது பாராட்டுக்குரியது. சனாதானத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற நோய் […]
பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பின் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். பின்னர் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள […]
இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், அதிருப்தி காரணமாக கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து விலகி மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ஐக்கியமானார். இதன்பின், பாஜக ஆதரவுடன் கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்த நிலையில், நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை […]
பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். பின்னர் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி […]
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் நாடு முழுக்க உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் […]
கோடீஸ்வரர்களின் ரூ.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார். இன்று பீகார் மாநிலத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, விவசாயிகளின் நிலத்தைக் காக்க வேண்டும் என்று எந்த அரசியல் தலைவர் பேசினாலும், அவர்கள் 24 மணி நேரமும் ஊடகங்களால் தாக்கப்படுவார்கள். இங்கு இந்திய அரசு நிலம் கையகப்படுத்தும் […]
பீகாரில் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று அமைந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில தலைமை செயலகத்தில் காலை 11:30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா மற்றும் பிற அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பீகார் அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்திய அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பான மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா உடனான கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதாவுடன் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமான ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் 9வது முறையாக முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். அவருக்கு […]
பீகார் : பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று 9வது முறையாக பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்கு பின்னர், […]
பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார். பின்னர் கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வராக தொடர்ந்து வந்தார். […]