சட்டவிரோத மதுவை குடித்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆதலால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுகின்றன. இந்த இறப்பு குறித்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, சட்டவிரோத மதுவை குடித்தால் […]
கண் அறுவை சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் இன்று டெல்லி சென்றுள்ளார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது கண் சிகிச்சைக்காக மட்டுமே டெல்லி வந்ததாகவும், இந்த வருகையின்போது பிரதமர் சந்திப்பு குறித்து எந்த திட்டமும் தங்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளார். தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு வியாழக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப் படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் […]
ரூ. 264 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் கனமழையால் தற்போது இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் கோபால்கஞ்ச் பகுதியில் கட்டி முடித்து திறக்கப்பட்ட ஒரே மாதத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரூ. 264கோடி செலவில் கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த சத்தர்காட் பாலத்தை கடந்த மாதம் 16ம் தேதி தான் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் […]
அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டா நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் அருண் ஜெட்லி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும் அருண் ஜெட்லியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் […]