உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் நடிகை வனிதா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் இவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நசரத்பேட்டை போலிஸாரின் உதவியுடன், தெலுங்கானா போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.