நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி தலைமையிலான இடதுசாரி கூட்டமைப்பு(கம்யூனிஸ்ட் முன்னணி) அண்மையில் நடந்த மாகாண மற்றும் பாராளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு பின்னர் ஒரு புதிய அரசை உருவாக்க வழிவகுத்தார். ஆகையால் இவரது தலைமையில் புதிய நேபாள அரசு மிக விரைவில் உருவாக உள்ளது.இவர் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் அதிபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.