பூடான் நாட்டின் உயரிய விருதான “நகடக் பெல் ஜி கோர்லோ” விருதை இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவுத்துள்ளது. பூடான் நாட்டின் 114-வது தேசிய நாளான இன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.அந்த வகையில், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு,பூடான் அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதான் “நகடக் பெல் ஜி கோர்லோ” விருதை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக,பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் கூறியதாக அந்நாட்டின் பிரதமர் […]
நேபாளம் மற்றும் பூடானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக திபெத் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நேபாளத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் இருக்கும் சிந்துபால்சவுக் மாவட்டத்தின் மேலம்சி மற்றும் இந்திராவதி ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருக்கும் வீடுகள், சாலைகள் ஆகியவை அடித்து செல்லப்பட்டன. மேலும், இந்த வெள்ளத்தில் கரையோர மக்கள் பலர் அடித்து செல்லப்பட்டது […]
கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி. பி.சி.ஆர் மருத்துவ சாதனங்களை பூட்டான் அரசுக்கு இந்தியா வழங்கியது. இதுகுறித்து இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில், தனது நெருங்கிய நண்பரும், அண்டை நாடுமான பூட்டானுடன் இந்தியா நிற்கும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு 20,000 சோதனைகளுக்கான COVID-19 RT-PCR சோதனைக் கருவிகளை திம்புவில் உள்ள இந்திய தூதரகம் பூட்டான் ராயல் அரசிடம் ஒப்படைத்தது. இந்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிகளை வழங்குவது […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தை பூட்டான் நாட்டில் காணொளி மூலம் தனது எதிரணியான லோடே ஷெரிங் உடன் அறிமுகப்படுத்தினார். கார்டை அறிமுகப்படுத்திய பின்பு, பிரதமர் மோடி பூட்டான் நேஷனல் வங்கி வழங்கிய ரூபே அட்டைகளை ஏடிஎம்களில் ரூ .1 லட்சத்திற்கும் ரூ .20 லட்சத்திற்கும் பாயிண்ட் ஆஃப் சேல் டெர்மினல்களில் பயன்படுத்தலாம் என்று கூறினார். இந்த நிகழ்வை தொடங்கியா பின் உறையற்றிய மோடி, “இது இந்தியாவில் பூட்டானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா, […]
அசாம் மாநிலம், உதல்குரி மாவட்டத்தில் இந்தோ பூட்டான் எல்லையில் ஹட்டிகோர் என்ற இடத்தில் ஜம்போ கூட்டத்திலிருந்து பிரிந்த 45 வயது பழமையான ஜம்போ யானை, கடந்த புதன் கிழமை சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த யானை சிக்கியிருந்தததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானையின் உடலை சதுப்பு நிலத்திலிருந்து மீட்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்போ யானை […]
பூடானில் உள்ள Travel வழிகாட்டி ஒருவரின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவில் பைக்கில் பூடானுக்கு சுற்றுலா சென்றனர். அதில் ஒருவர் மகாராஷ்டிரா சார்ந்த அபிஜித். இந்தக் குழுவினர் நீண்ட நேரம் பைக்கில் பயணம் செய்தால் ஓய்வெடுக்க பூடானில் டச்சுலா பாஸ் என்ற பகுதியில் ஓய்வு எடுத்தனர். அப்போது அங்கிருந்த நினைவு ஸ்தூபி மீது ஏறிநின்று அபிஜித் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். அவர் எடுத்த அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலர் […]
பூடான் 130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றார். அங்கு சென்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,130 கோடி இந்தியர்களின் இதயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான்.பூடான் வளர்ச்சிக்கு பங்களிப்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று பேசினார்.
மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பூடான் பிரதமர் லோட்டே செரிங்கிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமராக லோட்டே செரிங் பதவியேற்ற பிறகு அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி, அமைச்சர்கள், அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய பூடான் பிரதமர் இந்தியா வந்துள்ளது மிகவும் […]