காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா புவனேஷ்வர் கலிட்டா அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாகியுள்ளது. இவர் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து நின்று தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் வெளியிட்டார்.அதில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா செய்துள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக […]