ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின் வாயில் இருந்து மருந்து பாட்டில் பத்திரமாக எடுக்கப்பட்டது. அந்த நாகப்பாம்புவின் விலைமதிப்பற்ற உயிர் எப்படி காப்பாற்றப்பட்டது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தை படம் பிடித்த சுசாந்தா நந்தா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பாட்டில் அகற்றப்பட்ட பிறகு, பாம்பு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது. […]
நேற்று மாலை டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். ஒடிசாவில் கோர்தா மாவட்டத்தில் உள்ள பெனபஞ்சரி கிராமத்தில் நேற்று மாலை ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஆசிரியர் மகன் 9 […]
ஏ.எஸ்.ஐ.சி.எஸ்(ASICS) எனப்படும் தனியார் அமைப்பு இந்த ஆண்டு இந்தியாவில் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படும் நகரங்கள் குறித்த ஆய்வை இந்தியா முழுவதும் மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் மகாராஷ்டிராவின் புனே நகரம் 10-க்கு 5.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா, கேரளாவின் திருவனந்தபுரம், ஒடிசாவின் புவனேஷ்வர் நகரம் ஆகியவை முறையே 2,3 மற்றும் 4-வது இடங்களை பெற்றுள்ளன. இப்பட்டியலில் நமது தமிழகத்தின் தலைநகர் சென்னை 3.3 மதிப்பெண்களுடன் 19-வது இடத்திலும், 3 மதிப்பெண்களுடன் பெங்களூரு கடைசி […]
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரியில் உள்ள பிஜூ பட்னாயிக் விமான நிலையத்திற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வருகை தந்தார். பின்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறப்பிடத்தில் உள்ள மியூசியத்தை பார்வையிடுகிறார்.அதன் பின்னர் புகழ்பெற்ற தலைவரான பிஜு பட்னாயிக் பூர்வீக இல்லமான ஆனந்த் பவன் மியூசியம் மற்றும் லேர்னிங் சென்டரை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க உள்ளார். ஒடிசாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவது இதுவே முதல் முறையாகும்.