பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது . அமைச்சர்கள் செங்கோட்டையன்,கருப்பணன்,ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் அணையை திறந்து வைத்தனர். பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் […]
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது ஈரோடு பவானிசாகர் அணை. நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாயாறு மற்றும் பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி கொண்டே வருகிறது நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 […]
நாளை முதல் 15 ஆம் தேதி வரை பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டதில் உள்ள பவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் 241.62 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுவதால், கோபி, பவானி, அந்தியூரில் உள்ள 24,505 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்காக நீர் […]
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. பவானிசாகர் அணை ஈரோடு மிக மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றது. இந்த அணையினால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக […]