பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து, 24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன வசதி பெறும்.
நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆதலால், சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதால் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பவானிசாகர் அணையில் நேற்று வரை 342 கனஅடியில் இருந்த தண்ணீர் இன்று காலை 886 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 53.03 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 5.2 […]