ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. பாரதீய பழங்குடியினர் கட்சி ஆதரவு.!
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெஹ்லோட் அரசு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், 200 பேர் கொண்ட சபையில் இரண்டு எம்.எல்.ஏக்கள் கொண்ட பாரதீய பழங்குடியினர் கட்சி ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை காங்கிரசுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், பாரதீய பழங்குடியினர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான ராஜ்குமார் ரோட் மற்றும் ராம்பிரசாத் டிண்டோர் ஆகியோர் ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவளிக்க அக்கட்சி உறுதியளித்துள்ளது. பாரதிய பழங்குடியின கட்சியின் தலைவா் மகேஷ்பாய் வாசவா கூறுகையில், […]