சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட அரசியல்வாதியாக ஆதவ் அர்ஜுனா உள்ளார். அவர் பேசும் கருத்துக்கள், சமூக வலைதளத்தில் பதிவிடும் கருத்துக்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. முன்னதாக தவெக தலைவர் விஜயுடன் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமட்டுமல்லாமல் , ஒருமித்த கருத்தை மேடையில் பிரதிபலித்து சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சம்பாதித்தார் ஆதவ் அர்ஜுனா. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட்டாகி உள்ளார் ஆதவ் அர்ஜுனா. இப்படியான சூழலில் நேற்று […]
காசியில் 4 ஆண்டுகள் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்கபட உள்ளது என வாரணாசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாகவி பாரதியார் இந்திய முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அப்படி அவர் 1898ஆம் ஆண்டு முதல் 1902 ஆண்டு வரையில் உத்திர பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் காசியில் தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அப்போது தான் ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். மேலும், அப்போது வாழ்ந்து வந்த பாலகங்காதர திலகர் […]
சுதந்திர வேட்கையினை மக்கள் மத்தியில் தனது இலக்கியம் மூலம் உயிரூட்டிய நம் மகாகவி பாரதியின் சிறு குறு குறிப்பு. 1882ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தனது பதினோராம் வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கொண்டதால், பின்னாளில் எட்டயபுரம் மன்னரின் அரசவை கவிஞர் ஆனார். அவர் வாழ்ந்த காலம் தான் சுதந்திரத்திற்கான போராட்டமும், மக்களுக்கு சுதந்திரம் மீதான வேட்கையும் தலைதூக்க ஆரம்பித்த காலம். அப்போது தனது பாடல்கள் மூலம் […]
பாரதியார் பாடலை தூய தமிழில் அருணாச்சல பிரதேச மாநில பெண்கள் இருவர் படுகின்றனர். அதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி தமிழில் பாராட்டியுள்ளார். தனது விடுதலை வேட்கை கொண்ட பாடல்கள் மூலம் சுதந்திரத்திற்காக ஏங்கி இருந்த இந்திய மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டியவர் மகாகவி பாரதியார். இவரது ‘ பாருக்குள்ளே நல்ல நாடு’ எனும் தமிழ் பாடலை பிழையில்லாமல், அச்சு பிசிராமல் தூய தமிழில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இரு பெண் சகோதரிகள் பாடியுள்ளனர். இதனை டிவிட்டரில் பார்த்த […]
புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் & சுதந்திர போராட்டவீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன். இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து பாரதியின் 100-வது ஆண்டு நினைவு நாளான இன்று, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் […]
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அறிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். பாரதியாரின் 100-வது நினைவு நாளான இன்று,அவரது நினைவைப் போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும்,இந்த அறிவிப்பின் மூலமாக வடஇந்தியாவில் தமிழ் தொடர்பான விரிவான […]
தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் மகாகவி நாளாக அனுசரிக்கப்படுகிறது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பாரதியாரின் பெருமையை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில்,மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று,அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும்கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி […]
“மகாகவி” என போற்றப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளில் அவரது தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன். இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பாரதியாரின் பெருமையை பதிவிட்டு வருகின்ற்னர். அந்த […]
பாரதியாரின் 100 வது நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி,தமிழில் ட்வீட் செய்துள்ளார். மகாகவி பாரதியார் தனது 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11- நள்ளிரவு இறந்தார்.இதனையடுத்து,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் தேதியன்று பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில்,பாரதியாரின் நினைவை போற்றும் வகையில்,செப்டம்பர் 11 ஆம் தேதி ‘மகாகவி நாளாக’ கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.அதன்படி,இன்று பலரும் அவரது நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில்,பாரதியாரின் […]
மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியவாதி, தமிழாசிரியர், விடுதலை போராட்டவீரர், பத்திரிக்கையாளர் என தமிழுக்கும் தாய் நாட்டிற்கும் பலவகையில் சேவையாற்றியுள்ளார். 1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி – இலக்குமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் சுப்பிரமணியன். 1897ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் பல தமிழ் கவிதைகள், இலக்கியங்கள் என பல படைப்புகளை எழுதியுள்ளார். எட்டப்ப நாயக்கர் […]
மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜதி பள்ளக்கு ஊர்வலத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மயிலாப்பூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் மற்றும் பாஜக எம்.பி.இலகணேசன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து நடைபெற்ற ஜதிபள்ளக்கு ஊர்வலத்தை துணை முதலமைச்சர் […]