ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்சி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசினார். அப்போது “எனது தமிழ் குடும்பமே என தமிழில் பேசி மோடி தனது உரையை தொடங்கினார். எனது தமிழ் குடும்பமே; முதலில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 20,000 கோடி மதிப்புள்ள திட்டங்களால் […]
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 1,528 மாணவர்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 30 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பட்டங்களை வழங்கிய பிறகு பிரதமர் மோடி, பல்வேறு தலைப்புகளில் முனைவர் பட்டம் […]
திருச்சியை மையமாக கொண்டுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், என் வாழ்வும், வளமும் மங்காதா தமிழ் தான் என்று சங்கே முழங்கு என கூறிய பாரதிதாசன் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது எனக்கு பெருமை. உயர்கல்வியில் இந்திய அளவில் […]
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 38- ஆவது பட்டமளிப்பு விழா, ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் இன்று வந்தடைந்தார். அப்போது, தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டார் பிரதமரை வரவேற்றனர். அதன் பிறகு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு முதல்வர், பிரதமர், ஆளுநர் என மூவரும் சாலை […]
படிப்புக்கு வயது இல்லை என கூறுவர். அதற்க்கு ஓர் உதாரணமாக தனது 91 வயதில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூரை சேர்ந்த மிஷ்கின். இவர் 1950 ஆம் ஆண்டே சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர், 1958ஆம் ஆண்டு தனது சி.ஏ படிப்பை முடித்து, ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இவர் செக் பௌன்ஸ் ( காசோலை திரும்ப வருதல் ) பற்றியும் அதில் நடக்கும் மோசடி பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து வந்தார். […]