பாரதியார் பல்கலைக்கழகம் : இந்த ஆண்டுக்கான பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தேதிகள் : விண்ணப்பம் வெளியான தேதி 25-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 12-08-2024 காலியிட விவரங்கள் : பதவியின் பெயர் காலியிடங்கள் தொழில்நுட்ப உதவியாளர் (வேதியியல் அறிவியல்) 2 […]
தொலைதூரக் கல்வி மாணவர்கள் அபராதம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வி மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் தேர்வு எழுதிய 50,000-க்கும் மேற்பட்டோர் உடனடியாக அபராதத்துடன் கட்டணம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தொலைதூரக் கல்வி மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இனி தேர்வெழுதவும், படிக்கவும் முடியாது என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.