இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்து வருவதால் தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரமாக்கியுள்ளது. இந்தியர்களுக்கு இந்த வருடத்திலேயே தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், பாரத் பையோடெக் நிறுவனம் ஒரு தொகுப்பு தடுப்பூசி தாயாரிக்க 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா அலை வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசியை போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பல மாநிலங்கள் தன்னிச்சையாக தடுப்பூசி நிறுவனங்களிடம் தடுப்பூசி இறக்குமதி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி […]