தமிழகத்தில் இன்று காலை முதல் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொமுச தெரிவித்துள்ளது. முக்கிய கோரிக்கைகள்: விலைவாசி உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும்,இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தன.அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. மக்கள் […]
மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் சந்தித்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு […]
வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், நாளை இயக்கப்படும் என அறிவிப்பு. விலைவாசி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை […]
நாடு முழுவது வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த் நடைபெற்ற நிலையில்,இதற்கு நடுவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கால்பந்து விளையாடினார்கள். டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக நடத்தியும், பலன் ஏதும் அளிக்கவில்லை. புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் ரத்து செய்யப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதையடுத்து, நேற்று பாரத் பந்த் என்ற பெயரில் நாடு முழுவதும் விவசாய […]
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ரயில் மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி […]
உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள் நொறுங்கட்டும் என்று முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாய அமைப்பினர் 13வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவும் […]
நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் மசோதாக்களுக்கு நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மொத்தம் 31 விவசாயிகள் அமைப்புகள் இன்று நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வகையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து, விவசாயிகள் இன்று நெடுஞ்சாலையில் போராட்டம் […]