மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். “மேட் இன் இந்தியா” டேப்லெட் கணினியைப் பயன்படுத்தி சீதாராமன் 2021 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கோரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தாக்கல் செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இன்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை , ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒத்துக்கப்பட்ட பொதுத்துறை […]
சட்டவிரோதமாக பெட்ரோல் பங்க் இயங்க அனுமதித்த, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத் பங்க், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக நிலத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக பெட்ரோல் பங்க் இயங்க அனுமதித்த, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவை பிறப்பித்தனர்.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்று நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு உள்ள 53 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கான ஆலோசகராக Deloitte Touche Tohmatsu India LLP என்கிற நிறுவனத்தையும் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்கள் மேலாண்மைக்கான துறை நியமித்துள்ளது. இந்தப் பங்குகளை வாங்க விரும்புவோர் மே 2ம் தேதிக்குள் விருப்பம் தெரிவிக்கலாம் என வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியவாதி, தமிழாசிரியர், விடுதலை போராட்டவீரர், பத்திரிக்கையாளர் என தமிழுக்கும் தாய் நாட்டிற்கும் பலவகையில் சேவையாற்றியுள்ளார். 1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி – இலக்குமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் சுப்பிரமணியன். 1897ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் பல தமிழ் கவிதைகள், இலக்கியங்கள் என பல படைப்புகளை எழுதியுள்ளார். எட்டப்ப நாயக்கர் […]
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துஉள்ள நிலையில் மத்திய அரசின் முடிவை கண்டித்து வருகின்ற 28, 29-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. தொழிற்சங்கங்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் ஷெனாய் கூறுகையில் , போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 6 வாரத்திற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என தொழில் தகராறு […]