மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் இன்று தொடங்குகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம், கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் மற்றும் மின்சார திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உள்ளிட்ட பல மாநில விவசயிகள் தேசிய தலைநகர் டெல்லியை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் […]
விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருவதால், டெல்லி எல்லையில் 25 ரயில்கள் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு நவம்பர் முதல் விவசாயிகள் டெல்லியில் எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதில் எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை. வேளாண் சட்டத்தை முழுமையாக […]
டெல்லியையும், ஹரியானவையும் இணைக்கும் குர்கான் எல்லை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லியில் விவசாயிகள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் எந்த ஒரு முடிவும் இதன்மூலம் கிடைக்கவில்லை. வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதால், நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லியில் விவசாயிகள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் எந்த ஒரு முடிவும் இதன்மூலம் கிடைக்கவில்லை. வேளாண் சட்டங்களை அடுத்த […]
புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும் டெல்லி எல்லைப் பகுதியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் பலர் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாயிகளுடன் பத்து சுற்று பேச்சுவார்த்தைகளை […]
இன்று உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கொரோனா நெறிமுறையை கண்டிப்பாக அமல்படுத்தவும், பாரத் பந்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொண்டது. மேலும், அனைத்து கொரோனா வழிகாட்டுதல்களும் போராட்டக்காரர்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு காவல் துறைகள் மற்றும் மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பாரத் பந்தின் போது அமைதியாக போராட வேண்டும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் நடைபெறும் […]