தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை வழங்கியுள்ளோம் என்று முக ஸ்டாலின் பேட்டி. இன்று காலை 10 மணிக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசவுள்ளனர். அப்போது தமிழக அரசின் சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு முடிந்து முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். […]