நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நாயகி. அவரின் நடிப்பில் பாகமதி நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,”பெண்கள் பல துறைகளில் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பெண்களை தவறான நோக்கத்தில் தொடும் வக்கிரபுத்தி கொண்டவர்களின் கைகளை வெட்ட வேண்டும். அவர்கள் மனதில் இருக்கும் அகங்காரத்தை அழிக்க வேண்டும்” என ஆவேசத்துடன் பேசினாராம் அனுஷ்கா.
நடிகை அனுஷ்காவின் நடிப்பில் பாகுபலி படத்தை அடுத்து விரைவில் வெளியாக இருப்பது பாகமதி. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த ட்ரைலரை பார்த்தவர்களது எண்ணிக்கை தற்போது 4 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டது. இதற்காக அனுஷ்காவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது நடிகர் பிரபாஸ் அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “குட் லக் ஸ்வீட்டி. மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதோ அவருடைய பதிவு https://twitter.com/PrabhasRaju/status/950343085732409344 True hardwork and sheer […]