ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.3,44,41,750 அதாவது (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியிருந்தது. இதனையடுத்து, மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,50,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) […]