2020-21-ஆம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில், சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த பள்ளிகள் என்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும், தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப அக்குழுவிற்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.