சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை ஓரத்தில் கால் நனைக்கும் விதமாக நிரந்தரமாக நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே போல பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரைக்கு செல்வதற்கு ஏதுவாக நடை பாதை அமைக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த நடைபாதை ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள நடைமேடையில் தனது 8 மாத குழந்தையுடன் தூங்கிய பெண், எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் விக்ரவாண்டியை பூர்விகமாக கொண்ட சினேகா என்பவர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் இவர், கணவரை பிரிந்து தனது 8 […]